என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சுப்பிரமணியன் சுவாமி"
அவனியாபுரம்:
பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்டவேண்டும் என்று 2 முறை மத்திய அரசிடம் கூறினேன். 2001ல் சரத்யாதவ் அமைச்சராக இருந்த போது மத்திய அமைச்சரவை முடிவு எடுத்தது. அப்போது தமிழக அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.
பிரபுல் படேல் விமான நிலைய திறப்பு விழாவில், முத்துராமலிங்க தேவரின் பெயரை கூற முயன்ற போது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலவரம் வரும் என தடுத்தார்.
தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இருந்த போது மதுரை விமான நிலையத்திற்கு முத்து ராமலிங்க தேவர் பெயர் சூட்ட அனுப்பிய திட்டத்தை நிராகரித்தவர் ஓ.பி.எஸ்.தான்.
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும். பா.ஜ.க.வின் கூட்டணி கொள்கை பிடிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் போட்டியிடத்தான் எனக்கு விருப்பம்.
ராகுல்காந்தி தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி ஏழைகளுக்கு ரூ.72 ஆயிரத்தை எங்கிருந்து கொடுப்பார்? வங்கியில் இருந்தா கொடுப்பார்?
இவ்வாறு அவர் கூறினார். #subramanianswamy #bjp #parliamentelection
திருவனந்தபுரம்:
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 28-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு சபரிமலை அய்யப்பன் கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்றும், தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் எனவும் அய்யப்ப பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால் கேரள அரசு, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வர வேற்றது. தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்தது. இது பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையடுத்து அய்யப்ப பக்தர்கள் சபரிமலையை பாதுகாப்போம் என்ற கோஷத்துடன் போராட்டத்தில் குதித்தனர். நாயர் சர்வீஸ் சொசைட்டியை சேர்ந்தவர்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர்.
இவர்களுடன் சபரிமலை அய்யப்பன் கோவில் தந்திரிகள், சபரிமலை கோவிலுடன் தொடர்புடைய பந்தளம் ராஜகுடும்பத்தினர் கைகோர்த்தனர்.
இவர்கள் தலைமையில் சபரிமலையை பாதுகாப்போம் என்ற போராட்டம் மாநிலம் முழுவதும் நடந்தது.
போராட்டத்தில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். பம்பை, நிலக்கல், பந்தளம், எர்ணாகுளம், திருவனந்தபுரம், கோழிக்கோடு, பாலக்காடு, பாறசாலை என மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த போராட்டம் தீயாய் பரவியது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேரள அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அலுவலகம், தேவசம் போர்டு மந்திரி கடகம் பள்ளி சுரேந்திரன் ஆகியோர் வீடுகளையும் முற்றுகையிட்டனர்.
அய்யப்ப பக்தர்களின் போராட்டத்திற்கு பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. அவர்களும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கேரள அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இதனை வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி மற்றும் சபரிமலையை பாதுகாப்போம் அமைப்பு ஆகியவை இணைந்து கடந்த 10-ந்தேதி பந்தளத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கண்டன பேரணி தொடங்கினர்.
இந்த பேரணியில் லட்சக் கணக்கான பெண்களும், அய்யப்ப பக்தர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் முக்கிய நகரங்கள் வழியாக நேற்று திருவனந்தபுரம் வந்து சேர்ந்தனர்.
திருவனந்தபுரத்தில் முதல்- மந்திரி பினராய் விஜயன் வீடு நோக்கி புறப்பட்ட பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பேரணியில் வந்தவர்கள் அங்கேயே தங்கினர்.
இன்று பேரணியில் வந்தவர்கள் திருவனந்தபுரம் தலைமைச்செயலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தில் பங்கேற்ற சர்வதேச இந்து பரிஷத் தலைவர் பிரவின் தொகாடியா கூறியதாவது:-
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக கேரளாவில் வரலாறு காணாத போராட்டங்கள் நடைபெறுகிறது. இதனை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும். பக்தர்களின் மத உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த தீர்ப்பை முறியடிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் 2 நாட்களில் அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும். இல்லையேல் 17-ந்தேதி நள்ளிரவு முதல் 18-ந்தேதி நள்ளிரவு வரை 24 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும். அவசர சட்டம் கொண்டுவரா விட்டால் மத்திய அரசை இந்துக்களுக்கு எதிரான அரசாக கருதுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே சபரிமலை அய்யப்பன் கோவில் நடை ஐப்பசி மாத பூஜைகளுக்காக நாளை மறு நாள் (17-ந்தேதி) மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட இருக்கிறது. சுத்தி பூஜைக்கு பிறகு மறுநாள் 18-ந்தேதி அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
அப்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பெண்களும் கோவிலுக்குள் வர வாய்ப்பு உள்ளது. திருப்திதேசாய் போன்ற பெண் ஆர்வலர்கள் கோவிலுக்கு வருவதாக கூறியுள்ளனர். பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் ஆச்சாரங்களுக்கு எதிராக கோவிலுக்கு வரும் பெண்களை தடுப்போம் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
இதன் காரணமாக கேரளாவில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இப்பிரச்சினைகளை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர கேரள அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து கேரளாவில் போராட்டங்களில் ஈடுபடும் அய்யப்ப பக்தர்களை சமரச படுத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக போராட்டத்தில் தீவிரம் காட்டும் அமைப்புகள், கோவில் தந்திரிகள், பந்தளம் ராஜகுடும்பம் ஆகியோரை பேச்சு வார்த்தைக்கு அரசு அழைத்தது.
கேரள அரசு, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனுத்தாக்கல் செய்வதாக அறிவித்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம் என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர். இது பற்றி பேசி முடிவெடுப்போம் என்று கேரள அரசு மீண்டும் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. நாளை இது தொடர்பான பேச்சு வார்த்தை நடக்கிறது.
இது பற்றி பந்தளம் ராஜகுடும்ப பிரதிநிதிகளுக்கு கேரள அதிகாரிகள், தேவசம் போர்டு நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டக்குழுவினருடன் ஆலோசித்து இன்று மாலை முடிவு தெரிவிப்பதாக பந்தளம் மன்னர் குடும்பம் அறிவித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகள் கூறும் போது, சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை கேரள அரசு உடனடியாக நிறை வேற்ற ஆர்வம் காட்டுவது ஏன்? இதனை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய தயங்குவதன் காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இவற்றிற்கு கேரள அரசு தெரிவிக்கும் பதிலை பொறுத்தே இப்பிரச்சினைக்கு சுமூக தீர்வு ஏற்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி நாயர் சர்வீஸ் சொசைட்டியின் அய்யப்ப பெண் பக்தர்கள் சங்கம், தந்திரி குடும்பத்தினர், பந்தளம் ராஜகுடும்பம் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் 10-க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் தசரா பண்டிகை விடுமுறைக்கு பிறகே சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. #Sabarimala #KeralaGovernment
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய தடை உள்ளது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பல வழக்குகள் ஒன்றாக்கப்பட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப் நாரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய விசாரித்தது.
இந்நிலையில், அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதுரை ஆதீனம், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் ஹாசன், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
சபரிமலையில் பாலின சமத்துவத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று அளித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பு நல்ல முடிவு என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார். கடவுள் அனைவருக்கும் சமமானவர். போகவேண்டும் என்று நினைப்பவர்கள் போகலாம் என்று கூறியுள்ள கமல், கலாச்சாரம் 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறும் என்று குறிப்பிட்டுள்ளார். #SabarimalaVerdict #SubramaniamSwamy
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனம், காங்கிரஸ் கட்சிக்கு 90.25 கோடி கடன் பாக்கி வைத்திருந்தது. அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.2000 கோடி இருக்கும். எனினும் சோனியா, ராகுல் ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், வெறும் 50 லட்சம் ரூபாய் மட்டுமே செலுத்தி அந்த நிறுவனத்தை கையகப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்பிரமணியன் சுவாமி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அவரது வாக்குமூலத்தின் ஒரு பகுதியை நீதிபதி சமர் விஷால் பதிவு செய்துகொண்டார். இதையடுத்து அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் சுப்பிரமணியன் சுவாமி வாக்குமூலத்தின் மீதமுள்ள பகுதியும் பதிவு செய்யப்படும். #NationalHeraldCase #SubramanianSwamyStatement
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்